சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ₹16.22 லட்சம் காணிக்கை 28.5 கிராம் தங்கம், 171 கிராம் வெள்ளியும் இருந்தது பொன்னை அருகே வள்ளிமலை

1 month ago 3

பொன்னை, நவ.27: பொன்னை அருகே வள்ளிமலையில் ₹16.22 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் 28.5 கிராம் தங்கம் மற்றும் 171 கிராம் வெள்ளியும் இருந்தது. வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு முருகர் மலைமேல் சுப்பிரமணியராகவும், மலையடிவாரத்தில் ஆறுமுகநாதராகவும் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடர்ந்து 4 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ₹16 லட்சத்து 22 ஆயிரத்து 777 கணக்கில் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த உண்டியல் காணிக்கையில் 28.5 கிராம் தங்கம் மற்றும் 171 கிராம் வெள்ளி நகைகளும் கணக்கில் கொண்டுவரப்பட்டது. அப்போது, காட்பாடி சேர்மன் வேல்முருகன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அனிதா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நாட்டாண்மை செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ₹16.22 லட்சம் காணிக்கை 28.5 கிராம் தங்கம், 171 கிராம் வெள்ளியும் இருந்தது பொன்னை அருகே வள்ளிமலை appeared first on Dinakaran.

Read Entire Article