அண்ணாநகர்: முகூர்த்த நாள் மற்றும் தைப்பூசம் முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இன்று முகூர்த்த நாள் மற்றும் நாளை தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் பூக்களை வாங்குவதற்கு இன்று அதிகாலையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால்
வியாபாரமும் களைகட்டியது.
இன்று ஒரு கிலோ மல்லி 2,400 ரூபாயில் இருந்து 3,600க்கு விற்பனையானது. ஐஸ் மல்லி 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரத்துக்கும் முல்லை 1,500லிருந்து 2,500க்கும் ஜாதி மல்லி 2,000லிருந்து 2,500க்கும் கனகாம்பரம் 600லிருந்து 1000க்கும் அரளி பூ 350லிருந்து 500க்கும் சாமந்தி 140 லிருந்து 200 க்கும் சம்பங்கி 150 லிருந்து 400 க்கும் பன்னீர் ரோஸ் 80 லிருந்து 160 க்கும் சாக்லேட் ரோஸ் 120 லிருந்து 240 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post சுபமுகூர்த்தம், தைப்பூசம் முன்னிட்டு பூக்கள் விலை பல மடங்கு உயர்வு: வியாபாரம் களைகட்டியது appeared first on Dinakaran.