சுனிதாவுக்கு உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்?

5 hours ago 3

வாஷிங்டன்,

9 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி உள்ள நிலையில், பல்வேறு உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. விண்வெளியில் தங்கியிருந்து பூமிக்கு திரும்பி வருவது என்பது கடினமான, சவால்கள் நிறைந்த ஒன்று ஆகும். பூமிக்கு திரும்பிய பின்னர் விண்வெளி வீரர்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

நீண்டகாலம் விண்ணீல் இருந்துவிட்டு திரும்பும் வீரர்களுக்கு இயல்பாக நடக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.விண்ணில் புவியீர்ப்பு இல்லாத சூழலில் இருந்து வந்ததால் எலும்புச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தசையிழப்பு, உடல் எடையிழப்பு, நரம்பியல் மண்டல் பாதிப்புகளை விண்வெளி வீரர்கள் சந்திக்க நேரிடும். மன, உடல்ரீதியாக புத்துணர்வு பெற விண்வெளி வீரர்கள் 45 நாட்கள் நாசாவிலேயே தங்கியிருப்பர். விண்வெளி சென்று திரும்பியவர் முழுமையாக பழைய நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் கூட ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article