சுனிதா வில்லியம்சின் நிபுணத்துவம் இந்தியாவுக்கு அவசியம்: இஸ்ரோ தலைவர் நாராயணன்

4 hours ago 2

பெங்களூரு,

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 விஞ்ஞானிகளும் அமெரிக்காவை சேர்ந்த நாசா அமைப்பின் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவியாகவும், பரிசோதனை மேற்கொள்ளவும் சென்றனர். முதலில் 8 நாட்கள் பரிசோதனைக்காக சென்ற அவர்கள், பின்னர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கினர் என தகவல் வெளியானது. எனினும், விண்வெளியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், 9 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் உதவியுடன் இன்று காலை பூமிக்கு திரும்பியுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பாதுகாப்புடனும், உடல் நலத்துடனும் உள்ளனர் என மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்சுக்கு இஸ்ரோ தலைவர் நாராயணம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. அதில், சுனிதா வில்லியம்ஸை வரவேற்கிறேன். நீடித்த பணிக்கு பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும்.

நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் விண்வெளி பயணத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் அமெரிக்காவுக்கு ஓர் உறுதிச்சான்றாக இது அமைந்துள்ளது. வில்லியமின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கு தொடர்ந்து உந்துதலாக இருக்கும் என கூறியுள்ளார்.

விண்வெளி துறையின் செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக, நானும் என்னுடைய சகாக்களும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன் உங்களுடைய வரும் நாட்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவை வளர்ச்சியடைந்த ஒரு நாடாக உருவாக்கும் பணியில், விண்வெளி துறையில் நீங்கள் பெற்ற சிறந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்வதற்கு நாங்கள் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

Read Entire Article