
தூத்துக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது சவேரியார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்தார். பெட்ரோல் போட்ட பின்னர் வாகத்தை இயக்க முயற்சித்தார். அப்போது பைக்கானது திடீரென மளமள வென தீ பற்றி எரியத்தொடங்கியது.
அங்கு பெட்ரோல் போட வந்தவர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை சுதாரித்துக்கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியரிகள் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.