சுனாமி பாதிப்பின் 20-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அனுசரிப்பு

3 months ago 11
சுனாமி பாதிப்பின் 20-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. கடலூர் முதுநகர் சிங்காரதோப்பு மற்றும் தேவனாம்பட்டினம் கடற்கரை நோக்கி மக்கள் பால்குடத்துடன் ஊர்வலமாகச் சென்று கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டு, கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடலூர் பால்குட ஊர்வலத்துடன் சென்று மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி  நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர், கடல் நீரில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நெல்லை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி - கடலில் பால் ஊற்றி அஞ்சலி நாகை மாவட்டம் வேதாரண்யத்தையடுத்த ஆறுகாட்டுத்துறை கடற்கரையில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் மக்கள் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சுனாமி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆறுகாட்டுத்துறை, நாகப்பட்டினம் சுனாமி நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மௌன அஞ்சலி தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில், சுனாமியாவில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்திவைத்தனர். பின்னர், மெழுகுவர்த்தி ஏந்தி, பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.   திரேஸ்புரம், தூத்துக்குடி மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்திவைத்து மீனவர்கள் அஞ்சலி 
Read Entire Article