
சென்னை,
சுந்தர் சி ஒரு தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் 30 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர் குடும்ப படமான 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா' ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கதைகள் கேட்டு வருகிறார்கள். தற்போது சுந்தர் சி 'கேங்கர்ஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இதற்கிடையில், சுந்தர் சி மற்றும் நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சுந்தர் சி, கார்த்தியிடம் கதை ஒன்றை சொல்ல அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். எனவே சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கப்போவது உறுதியாகி உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் கார்த்தி 'வா வாத்தியார் மற்றும் சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.