அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகல்

10 hours ago 2

 

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன.

அதன்படி, அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி (இந்திய சமூக ஜனநாயக கட்சி) அறிவித்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இப்போது தமிழ்நாட்டில் ஒரு கட்சி அழியப்போவது உறுதி. தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள், தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு' என்றார்.

Read Entire Article