ராஜபாளையம், மார்ச் 10: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்டிவிசன் சுதர்சனம் ஸ்பின்னிங் மில்லில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தொழிலாளர்களுக்கான பொது விழிப்புணர்வு கருத்தரங்கு ஆலையின் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலையின் பொது மேலாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஆலையின் தொழில் துறை உறவு முதுநிலை மேலாளர் ராம்குமார் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரிய பாக்கியம் ராமராஜூ சர்ஜிகல் குழுமத்தின் உள்புகார் குழு வெளிநபர் பிரதிநிதி வழக்கறிஞர் ராஜலட்சுமி, தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக மருத்துவ அலுவலர் டாக்டர் நசீமா ஆகியோர் பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பு பற்றிய பொது விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர். மேலும் இவ்விழாவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பெண் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக ஆலையின் தொழிலாளர் நல அதிகாரி கவுதமன் நன்றியுரையாற்றினார் .
The post சுதர்சனம் ஸ்பின்னிங் மில்லில் விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.