சீர்காழி, மே 15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் 1434 பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி கிராம கணக்குகள் முடித்தல் நிகழ்ச்சி சீர்காழி ஆர்டிஓ சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவிற்கு உடனுக்குடன் சான்றிதழ்களை ஆர்டிஓ வழங்கினார். தகுதி உடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் சீர்காழி தாசில்தார் அருள்ஜோதி, குடிமை பொருள் வழங்கல் துறை தனி தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஹரிதரன் நேர்முக உதவியாளர் மேகலா, தலைமை இடத்து துணை தாசில்தார் கணேசன், கலைஞர் மகளிர் உதவி திட்ட தனி துணை தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார்கள் தரணி, தேவகி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், நவநீதன், மற்றும் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post சீர்காழியில் ஜமாபந்தி மாற்று திறனாளிகளுக்கு உடனுக்குடன் சான்றிதழ் appeared first on Dinakaran.