சீமான் வீட்டை ஜனவரி 22ம்தேதி முற்றுகையிடுவோம்: தந்தைபெரியார் திக பொதுச்செயலாளர் அறிவிப்பு

3 hours ago 4

சென்னை: தந்தை பெரியார் குறித்து இழிவாகப் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை ஜனவரி 22ம் தேதி முற்றுகையிடுவதாக தந்தை பெரியார் திகபொதுச்செயலாளர் கோவை.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.  அவர் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி கடலூரில் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு ஆதாரம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் பதிவான போதும் ஆதாரம் கொடுக்காமல் தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய பெரியாரை சீமான் இழிவுபடுத்துகிற செயல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்த பின்னரும் பெரியார் பற்றி அவதூறு பரப்புவதை சீமான் நிறுத்திக் கொள்ளாத காரணத்தால்,பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற 22ம் தேதி புதன் காலை 10 மணி அளவில் சென்னை நீலங்கரையில் உள்ள சீமானின் வீட்டை ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

எனவே பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இயக்கங்களும்,தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்களும்,தமிழின உணர்வாளர்களும் அவசர அழைப்பாக ஏற்றுக்கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

The post சீமான் வீட்டை ஜனவரி 22ம்தேதி முற்றுகையிடுவோம்: தந்தைபெரியார் திக பொதுச்செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article