சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் உறுதி: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார்

4 months ago 11

திருச்சி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில், திருச்சி எஸ்.பி.யாக இருந்து திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூபில் பொய்யான தகவலை பரப்பியதற்காகவும், மற்றொரு அவதூறு வழக்கிலும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து சீமான் என்னை அநாகரீகமாக பேசினார். அவரது கட்சியினர் என் குடும்பத்தினரையும் அவதூறாகவும், கேவலமாகவும் பேசினர்.

Read Entire Article