ஈரோடு, ஜன.11: தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஈரோட்டில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தந்தை பெரியார் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், சீமானுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு திடீரென திரண்ட திராவிட தமிழர் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து, சீமானை கைது செய்யக்கோரியும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷமிட்டப்படி, தாலுகா அலுவலகம் முன்பு இருந்து பன்னீர்செல்வம் பார்க் வரை அக்கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
The post சீமான் உருவ பொம்மை எரிப்பு பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.