சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா: வாகன சேவை விவரம்

1 week ago 5

திருமலை,

திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வரும் 18-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 17-ம் தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.

பிரம்மோற்சவ விழா வாகன சேவைகள் விவரம் வருமாறு:-

18-ம் தேதி காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 19-ம் தேதி காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 20-ம் தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 21-ம் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 22-ம் தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

23-ம் தேதி காலை ஹனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத் தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 24-ம் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 25-ம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 26-ம் தேதி காலை சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் தினமும் வாகனச் சேவைக்கு முன்னால் கோலாட்டம், பஜனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் அன்னமய்யா சங்கீர்த்தனங்களை பாடுவார்கள்.

Read Entire Article