சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம்: 9 நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

7 months ago 27

பீஜிங்,

இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

இதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்

இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

Read Entire Article