பீஜிங்,
சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9-வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருமாறு தனது நட்பு நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. அவர்களில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் ஒருவர்.
அதன்படி சீனா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் சீனா சென்றார். அங்கு அவர் நேற்று தலைநகர் பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.