
சென்னை,
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ். மலையாள நடிகரான இவர் அடுத்ததாக 'லவ்லி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மே 2ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுளார். இவர் இதற்கு முன் சால்ட் அன் பெப்பர், இடுக்கி கோல்ட் மற்றும் மாயநதி படங்களுக்கு இணை எழுத்தாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது. இது ஒரு பேண்டசி நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஈ- பேசுவது கதாநாயகனான மாத்யூவிற்கு மட்டும் கேட்கிறது. அந்த லவ்லி என்ற ஈ- க்கும் மாத்யூக்கும் உள்ள நகைச்சுவை காட்சிகள் மற்றும் ஜெயிலில் இருக்கும் மேத்யு தாமஸிற்கு ஒரு பந்தமாக இருப்பது அந்த ஈ மட்டும்தான். இந்த லவ்லி என்ற ஈ கதாப்பாத்திரத்திற்கு தமிழ் பின்னணி பாடகியான சிவாங்கி குரல் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் உன்னிமாயா பிரசாத், மனோஜ், அஸ்வதி ராமசந்திரன், பிரஷாந்த் முரளி, பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.