தேவையானவை:
பூரணத்திற்கு – வேகவிட்டு மசித்த பாசிப்பருப்பு – 50 கிராம்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
ஏலப்பொடி – சிட்டிகை,
துருவிய கும்மடிக்காய் – 1 கப்,
சர்க்கரை (அ) வெல்லம் – 50 கிராம்,
நெய் – 2 டீஸ்பூன்.
மேல் மாவிற்கு:
அரிசிமாவு – 100 கிராம்,
மைதா – 25 கிராம்,
சோடா உப்பு -சிட்டிகை,
சர்க்கரை – சிட்டிகை,
உப்பு, மிளகாய் பொடி – தேவையான அளவு,
பொரிக்க சமையல் எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நெய் சூடாக்கி கும்மடிக்காய் துருவலை சற்றே பச்சை வாசனை போக வதக்கி உடன் தேங்காய் துருவல், மசித்த பாசிப்பருப்பு, ஏலப்பொடி, வெல்லம் சேர்த்து நன்கு கிளறி எடுத்து ஆறவிட்டு, எலுமிச்சை பழ அளவு உருட்டி வைக்கவும். அரிசி மாவு, மைதா, சோடா, உப்பு, சர்க்கரை, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து ½ மணி நேரம் புளிக்கவிடவும். இந்த மாவில் உருட்டி வைத்த உருண்டைகளை மேல் மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து, சற்றே சூடாக இருக்கும் போது பானி பூரி போல் சிறிய பள்ளம் செய்து 3 டீஸ்பூன் உருக்கிய நெய் விட்டு சாப்பிடலாம்.
The post சிவப்பு பூசணி ஸ்வீட் போண்டா appeared first on Dinakaran.