சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்து ஹிட் அடித்த படங்கள்!

2 months ago 12

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது நாம் அறிந்ததே.

ஆனால், சில ஹிட் படங்களில் நடிக்க மறுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், தற்போது இவர் நடிக்க மறுத்து ஹிட் அடித்த படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த படங்களின் பட்டியல் இதோ!

'சூரரைப் போற்று'

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஓ.டி.டியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் 5 தேசிய விருதுகளை விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையும் வென்றது. இப்படம் தற்போது பிரைம் வீடியோ தளத்தில் உள்ளது.

'டாடா'

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது பிரைம் வீடியோ தளத்தில் உள்ளது.

'இந்தியன் 2'

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 12 -ம் தேதி 'இந்தியன் 2' படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்தனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியன் 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் உள்ளது.

'சித்தா'

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.

'ராஜா ராணி'

கடந்த 2013ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ராஜா ராணி. இந்த திரைப்படத்தை அட்லீ எழுதி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.

Read Entire Article