சென்னை,
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. அதன்பிறகு இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், ரஜினி மற்றும் சில தெலுங்கு நடிகர்களுடன் சிபி சக்கரவர்த்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதநிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்க போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல், சிபி சக்கரவர்த்தி அடுத்து நானியுடன் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை முடித்த பின்பு சிவகார்த்திகேயன் உடன் இணைவார் என்று தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.