4 வழிச்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் பலி

4 hours ago 1

விருதுநகர்,

சிமெண்டு மூடைகளை ஏற்றிய லாரி ஒன்று மதுரையை நோக்கி விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் சென்றது. சாத்தூர் பூசாரிபட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக பழுதாகி சாலையில் நின்றது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும், அதன் பின்னால் வந்த சரக்கு வேனும் அடுத்தடுத்து லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதின.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த விருதுநகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 33), அவரது நண்பரான திருச்சியைச் சேர்ந்த வினோத் (36) ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

அதேபோல சரக்கு வேனில் பயணம் செய்த கோவில்பட்டியைச் சேர்ந்த பழக்கடை வியாபாரி வேல்முருகனும் (43) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். படுகாயம் அடைந்த வேன் டிரைவர் ரமேஷ் கார்த்திக்கை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Read Entire Article