சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' டைட்டில் டீசர் நாளை வெளியீடு

5 months ago 18

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு 'பராசக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'எஸ்கே 25' திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'எஸ்கே 25' திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

The revolution waits for no one ✊Tomorrow marks the beginningCatch the #SK25 Announcement teaser tomorrow at ⏰ 4:00 PM#VivaLaRevolución The revolution is yours to witness Stream it on https://t.co/dRQ2AXcho0@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohanpic.twitter.com/lHxAY8m34u

— DawnPictures (@DawnPicturesOff) January 28, 2025
Read Entire Article