சிவகாசி அருகே வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை: மணல் லாரிகள் பறிமுதல்

1 week ago 2

 

சிவகாசி, ஏப்.2: சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டி- கொங்கன்குளம் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக அதிகாலை 2 மணிக்கு வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் திருவேங்கடபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் குருமூர்த்தி(39) என்பவரை கைது செய்து ராஜசேகர், ராம்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். நள்ளிரவில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிவகாசி அருகே வருவாய்த்துறை அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை: மணல் லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article