சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

3 months ago 8

 

சிவகங்கை, பிப்.17: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் மதுரை, தொண்டி சாலை அருகே உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பத்தூர், திருச்சி, மதுரை, கோவை, திருப்பத்தூர், ராமேஸ்வரம், மானாமதுரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவு நேரத்தில் சென்னை செல்லும் அரசு பஸ் மற்றும் ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

சிவகங்கையில் இருந்து செல்லும் டவுன் பஸ்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். சிவகங்கை வழியாக ராமேஸ்வரம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, மடப்புரம், தாயமங்கலம், திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கோவில்கள் அதிகமாக உள்ளன. இதனால் சாதாரண நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பஸ் ஸ்டாண்டில் அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே பஸ்கள் நிறுத்தப்பட்ட பகுதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் அவ்வப்போது திருட்டுகள் நடந்து வருகின்றன. இவற்றை தடுக்கவும் இரவு நேரங்களில் பணி முடிந்து செல்லும் பெண்கள் அச்சம் இல்லாமல் பஸ் ஸ்டாண்ட் உட்புறம் அமரும் வகையிலும் பஸ் ஸ்டாண்ட் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது.

பயணிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் உட்புறம் இரவு நேரத்தில் பஸ்சுக்காக கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் திருட்டுகள், தேவையற்ற தொல்லைகளை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். கேமராக்கள் இருந்தால் சமூக விரோதிகளுக்கு அச்சமிருக்கும். தேவையற்ற சம்பவங்கள் நடக்காது. எனவே பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article