சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் பகுதி மக்களுக்காக ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 hours ago 1

சிவகங்கை: 2 நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அவர் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில், ரூ.50 லட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைத்தார். பின்னர் மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் மக்களுக்கு 40,000 நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்குவேலி அம்பலம் சிலை மற்றும் மணி மண்டபத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ரூ.89 கோடியில் சிவகங்கையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும். சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திமுக ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டது.

சிவகங்கையில் புதிய நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதி மக்களுக்காக ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திமுக ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டது. சிவகங்கையில் புதிய நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று உதவுவதுதான் திராவிட மாடல் அரசு. அதேபோல் திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும், இவ்வாறு தெரிவித்தார்.

The post சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் பகுதி மக்களுக்காக ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article