979 பணியிடங்களுக்கு மே 25ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும்

1 hour ago 1

டெல்லி: 979 பணியிடங்களுக்கு மே 25ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆக.22ம் தேதி முதல் 5 நாட்கள் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என யு.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 1,056 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 979ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெறும்

முதல்நிலை தேர்வை பொறுத்தவரை காலை 9:30 முதல் 11:30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2:30 மணி முதல் 4:30 மணி வரை திறனறி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெறும். தேர்வர்கள் செல்ஃபோன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அதேபோல பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் மின்னல் முகவரி வைத்து மட்டுமே தேர்விற்கு விண்ணப்பிக்கமுடியும். தேர்வர்கள் ஆதார்அட்டை, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தேர்வர்களின் கையெழுத்து, தேவையான சான்றிதழ்களை தேவையான அளவில் பென் டிரைவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதல்நிலை தேர்வுக்கு மொத்தம் 80 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

 

The post 979 பணியிடங்களுக்கு மே 25ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும் appeared first on Dinakaran.

Read Entire Article