கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கு : ஜனவரி 27ல் விசாரணை

2 hours ago 1

கொல்கத்தா : கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரி மேற்குவங்க அரசு தாக்கல் செய்த மனு ஜனவரி 27ம் தேதி விசாரிக்கப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கை அரிதிலும் அரிதான கொலை குற்றமாக கருத முடியாது என்பதால் மரண தண்டனை விதிக்க மறுப்பு தெரிவித்த கிழமை நீதிமன்றம், மரணம் வரை ஆயுள் தண்டனை விதிப்பதாக தண்டனை விவரத்தை அறிவித்திருந்தது. வழக்கின் கொடூரம் மற்றும் தன்மை கருதி அவருக்கு மரண தண்டனை வழங்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

The post கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கு : ஜனவரி 27ல் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article