சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி அடி, உதை

3 months ago 14

*ஸ்ரீகாளஹஸ்தியில் பரபரப்பு

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி நகரில் உள்ள சந்தை மைதானத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அடையாளம் தெரியாத இளைஞரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிப் போலீசில் ஒப்படைத்தனர். திருப்பதி மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி நகரில் உள்ள சந்தை மைதானம் பகுதியில் தெருவில் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப் பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற இளம் பெண் கவனித்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைவதற்குள் அந்த இளைஞன், சிறுமியை புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மேல் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, ​​அப்பகுதி மக்கள் வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து, ஸ்ரீகாளஹஸ்தி ஒன் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பட்டப்பகலில் சிறுமியை இளைஞர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி அடி, உதை appeared first on Dinakaran.

Read Entire Article