ராமநாதபுரம், டிச. 6: ராமநாதபுரம் மாவட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினைவரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிசெய்வதற்காக உழவுமானியமாக அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 40% மானியம் அல்லது ரூ.5400- பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மானிய உதவி பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம், பரமக்குடி சௌகத் அலி தெருவிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம் மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8610203117, 9655304160 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
The post சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.