சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர் வனம்: 19 நீர்நிலைகள், 3 ஆயிரம் மரங்கள் நட வனத்துறை திட்டம்

3 months ago 12

சென்னை: சென்னையை அடுத்த சிறுசேரியில் 50 ஏக்கரில் 19 நீர்நிலைகளை ஏற்படுத்தி, 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு நகர் வனம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்காக மக்கள் நகர்ப்புறங்களுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை நகர்ப்புறங்களில் உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் மக்கள்தொகைக்கு ஏற்ப வனப்பரப்பு விரிவடையவில்லை. நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற பசுமையை அதிகரிக்கும் வகையில் வனத்துறை சார்பில் ரூ.5 கோடியில் சென்னை அடுத்த சிறுசேரியில் 50 ஏக்கர் பரப்பில் நகர்வனத்தை அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

Read Entire Article