சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நயன்தாரா.. எவ்வளவு தெரியுமா?

2 weeks ago 9

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்தது. .

இப்படத்தையடுத்து அனில் ரவிபுடி, சிரஞ்சீவியின் 157-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சுமார் ரூ.18 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அதிக சம்பளம் கேட்டுள்ளதாக படக்குழு அவரிடம் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி வருகிறார்களாம்.

இதற்கிடையில் நடிகை நயன்தாரா சிரஞ்சீவியுடன் இணைந்து 'சைரா நரசிம்ம ரெட்டி' மற்றும் 'காட்பாதர்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article