
ஐதராபாத்,
பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்தது. .
இப்படத்தையடுத்து அனில் ரவிபுடி, சிரஞ்சீவியை வைத்து படம் பண்ண உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. இதனால், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், அது உண்மையாகி இருக்கிறது.
சிரஞ்சீவியின் 157-வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். நேற்று யுகாதி திருநாளை முன்னிட்டு இப்படத்தின் பூஜை நடைபெற்றது. மேலும், இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.