
சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி, சிரஞ்சீவியின் 157-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். இரண்டாவது கதாநாயகியாக பிரபல நடிகை கேத்ரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. நயன்தாரா முதன்மை கதாநாயகியாக நடிக்கவிருந்தாலும், கேத்தரின் கதாபாத்திரம் கதைக்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது. இது சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் பணியாற்றும் முதல் படமாகும். கேத்தரின், சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிரஞ்சீவியின் 157-வது படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமென நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான எப் 2, எப் 3, பகவந்த் கேசரி என்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அனில் ரவிபுடி.சமீபத்தில் வெளியான இவரது சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படம் ரூ.230 கோடியை தாண்டி வசூலித்தது.