
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள் "தக் லைப்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து, 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் 49' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பூஜை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.