
சென்னை,
'ஹனுமான்' படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடி வசூலித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. இவரது அடுத்த படம் 'சிம்பா'. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார். ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்சன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.
தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் மோக்சக்னாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டனின் மகள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இவர் 'சாது', 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரது மகள் ராஷா ததானி. இவர் தற்போது 'சிம்பா' படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு நடிக்கும் பட்சத்தில், ராஷா ததானியின் முதல் படமாக இது அமையும்.
விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மோக்சக்னாவுக்கு அம்மாவாக பிரபல நடிகை ஷோபனா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.