சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான நிழற்குடை: புதிதாக கட்ட கோரிக்கை

1 month ago 9

ஊத்துக்கோட்டை: வெங்கல்குப்பம் கிராமத்தில் செடிகொடிகள் படர்ந்தும், சிமென்ட் பூச்சு பெயர்ந்தும் சேதமடைந்து கிடக்கும் பேருந்து நிழற்குடையினை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல்குப்பம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் மைய பகுதியில் கடந்த 45 வருடத்திற்கு முன்பு பயணியர் பேருந்து நிறுத்த நிழற்குடை மற்றும் அதன் அருகில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

வெங்கல்குப்பம் கிராம பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கிருந்து கன்னிகைப்பேர், பெரியபாளையம், திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று வருவதற்காக இந்த பேருந்து நிழற்குடையினை பயன்படுத்தி வந்தனர். தற்போது நிழற்குடை செடிகொடிகள் படர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல், குடிநீர் தொட்டியும் பயன்பாடில்லாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடிகொடிகள் படர்ந்துள்ள பேருந்து நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான நிழற்குடை: புதிதாக கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article