சென்னை: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தில் சமையல் எரி வாயு, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், எண்ணெய், மெழுகு மற்றும் தார் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் நிர்வாக இயக்குநராக சங்கர் நேற்று பொறுப்பேற்றார். இவர், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இயந்திர பொறியாளர். இந்தியாவின் எரிசக்தித் துறையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2020ம் ஆண்டு சிபிசிஎல் வாரியத்தில் இயக்குநராக (தொழில்நுட்ப) நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2024ம் ஆண்டு கூடுதல் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார்.
சிபிசிஎல் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவரது தலைமையின் கீழ், சிபிசிஎல் நீடித்த லாபம் அடைந்துள்ளது, இது நிறுவனத்தின் நிலையை ‘பி’ லிருந்து ‘ஏ’ நிறுவனமாக உயர்த்த வழிவகுத்தது. சங்கர் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தலைமை தாங்கினார், புதிய மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் நிலையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார். தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பின் வலுவான ஆதரவாளரான இவர், ஐஐடி மெட்ராஸ் மற்றும் பிற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டாண்மையை வளர்த்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் புதுமைகளை ஊக்குவித்துள்ளார்.
பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நிறுவன செயல்பாட்டில் அவர் செலுத்தும் கவனத்தால் இந்தியா எரிசக்தித்துறையில் சிபிசிஎல் தனது பங்கை தொடர்ந்து வலுப்படுத்தும் என சிபிசிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post சிபிசிஎல் நிர்வாக இயக்குநராக சங்கர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.