சின்ன சின்ன கை வைத்தியம்!

5 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

இருமல் சளி குணமாக

சித்தரத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டுவந்தால் வறட்டு இருமல் சளி குணமாகும்.

தலை சுற்றல் குணமாக

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக

கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக,

முசுமுசுக்கை இலையை நறுக்கி வெங்காயத்துடன் நெய்விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

சளிக்கட்டு நீங்க

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

தலைபாரம் குறைய

நல்லெண்ணெயில் தும்பை பூவைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

ஜலதோஷம் நீங்க

முருங்கைப் பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.

குமட்டல் குணமாக

வெற்றிலைக் காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.

பித்தம் நீங்க

மாதுளம்பழம் சாப்பிட்டுவர அறிவு விருத்தி, ஞாபகசக்தி, எலும்பு வளர்ச்சி, பித்தம் சம்பந்தமான வியாதி நீங்கும்.

பாதவெடிப்பு மறைய

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாகக் குழைத்து தொடர்ந்து பாதவெடிப்பில் தடவி வந்தால் பாத வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

டீ டிகாஷனுடன் எலுமிச்சைச் சாறுவிட்டு குடித்தால் தொண்டைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்புக்கு

தூங்கப்போகும் முன் 1 கப் சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளித்தால், அது தொண்டை கரகரப்பை நீக்கும்.

தொகுப்பு: பொ.பாலாஜி

The post சின்ன சின்ன கை வைத்தியம்! appeared first on Dinakaran.

Read Entire Article