சென்னை : சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
*அடையாறில் பல இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் தரமணியில் ஒன்றுகூடி நகைகளை பிரித்துக்கொண்டனர்.
*தரமணியில் இருந்து வாடகை கார் மூலம் விமான நிலையம் சென்ற 3 கொள்ளையர்களும் அங்கிருந்து பிரிந்து தப்ப முயன்றுள்ளனர்.
*கொள்ளையன் ஜாபர் மற்றும் அம்ஜத் மீசம் ஆகியோர் விமானம் மூலமும், சல்மான் ரயில் மூலமும் தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.
*ஐதராபாத் சென்று சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருந்த கொள்ளையன் அம்ஜத்தையே முதலில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
*கடைசி நேரத்தில் ஐதராபாத் செல்ல டிக்கெட் பெற்று விமானத்தில் அம்ஜத் அமர்ந்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
*விமானத்தில் இருக்கை எண் 12 அம்ஜத்துக்கு ஒதுக்கப்பட்டதை அறிந்து போலீஸ் அங்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.
*தனது இருக்கையில் அமராமல் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அம்ஜத்தை போலீசார் விசாரித்தனர்.
*தனக்கு மராட்டிய அமைச்சர் உள்ளிட்டோரை தெரியும் என கூறி தப்பிக்க அம்ஜத் மீசம் முயற்சி செய்துள்ளார்.
*ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நகை பறிப்பை ஒப்புக்கொண்டான் அம்ஜத் மீசம்.
*மற்றொரு கொள்ளையன் ஜாபர் மும்பை விமானத்தில் செல்ல இருப்பதையும் அம்ஜத் போலீசாருக்கு கூறியுள்ளான்.
*இதை தொடர்ந்து மும்பை விமானத்தில் ஏற இருந்த ஜாபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
*காகிதத்தில் சுற்றி விமான நிலைய கழிவறையில் ஜாபர் பதுக்கி வைத்திருந்த 2 நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
*ஜாபர் கூறிய தகவல்களின் அடிப்படையில் கொள்ளையன் சல்மான் ரயில் மூலம் தப்பிச் செல்வது தெரியவந்தது.
*போலீசாரை திசை திருப்ப விமான நிலையத்தில் இருந்து முதலில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சல்மான் சென்றுள்ளான்.
*பின்னர் கோயம்பேட்டில் இருந்து மற்றொரு ஆட்டோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சல்மான் சென்றதும் தெரியவந்தது.
*பினாகினி ரயிலில் கொள்ளையன் சல்மான் இருப்பதை உறுதி செய்த போலீஸ், ரயில்வே போலீஸ் உதவியுடன் ஆந்திராவில் மடக்கினர்.
*பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறையில் பதுங்கியிருந்த கொள்ளையன் சல்மானை ஓங்கோலில் பிடித்தது போலீஸ்.
*சிம் கார்டு வாங்க கொடுத்த ஆவணத்தில் இருந்த புகைப்படத்தை வைத்து கொள்ளையன் சல்மானை அடையாளம் கண்டது போலீஸ்.
The post சினிமாவை மிஞ்சும் வகையில் போலீசார் சேசிங், கொள்ளையர்களின் திசைதிருப்பும் உத்தி முறியடிப்பு : 3 பேர் கைது செய்யப்பட்டது எப்படி? appeared first on Dinakaran.