சினிமாவில் அறிமுகமாகும் ரன்பீர் கபூரின் சகோதரி

6 days ago 4

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். இவரது சகோதரி ரித்திமா கபூர். இவர் 'பாலிவுட் வைவ்ஸ்' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இந்த நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இவர் தற்போது சினிமாவில் அறிமுகாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இப்படத்தில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு ஜோடியாக ரித்திமா கபூர் நடிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், ரன்பீரின் அம்மா நீது கபூரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article