சினிமாவில் 50 ஆண்டுகள் - மம்முட்டிக்கு கிடைத்த கவுரவம்

6 hours ago 3

கொச்சி,

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், மம்முட்டி. 73 வயதானாலும், அது தெரியாத அளவுக்கு இளம் கதாநாயகர்களுக்கே 'டப்' கொடுத்து நடித்து வருகிறார். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக ஜொலிக்கிறார். குறிப்பாக ரசிகைகளுக்கு பிடித்த நடிகராக வலம் வருகிறார்.

இந்த நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் மம்முட்டிக்கு கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் 'மலையாள சினிமாவின் வரலாறு' என்ற பெயரில் மம்முட்டியின் 50 ஆண்டு கலைப்பயணம் ஒரு பாடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இது மம்முட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரபலங்களும் சமூக வலைதளங்களில் மம்முட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article