சினிமா என்பது கணிக்க முடியாத 'கேம்' போன்றது - பறந்து போ பட இயக்குனர்

6 hours ago 1

சென்னை, 

"கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த 4-ந்தேதி படம் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இதையொட்டி படத்தின் நன்றி அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் ராம் பேசுகையில், நிறைவான மகிழ்ச்சியான பயணமாக பறந்து போ படம் அமைந்து உள்ளது. படத்தை சுமார் 40 பேருக்கு திரையிட்டு காண்பித்தேன். படம் பார்த்து விட்டு ராம் காமெடி படம் எடுத்திருக்கார். அதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள். சிவாவும் நீங்களும் சேர்ந்திருக்கீங்களே எப்படி? என எனக்கு அறிவுரை சொல்ல தொடங்கி விட்டார்கள். நான் தெளிவாக இருந்தேன். உதவி இயக்குனர் ராம் சங்கர்தான் படத்தின் தயாரிப்பாளரை அழைத்து வந்தார். தயாரிப்பாளரிடம் நான் முதலில் கேட்டது சார் நீங்கள் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறீர்களா? தோல்வி அடைவதற்கும் வாய்ப்பு இருக்கு என கேட்டேன். சினிமா என்பது கணிக்க முடியாத கேம்தான். இப்படியும் நடக்கலாம். அப்படியும் நடக்கலாம். தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article