சித்ரா பவுர்ணமி: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

16 hours ago 3

சென்னை,

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 11, 12-ந் தேதிகளில் காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து 11, 12-ந் தேதிகளில் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

மேலும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 11, 12-ந் தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் 12, 13-ந் தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06132) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article