சித்தூர் மாவட்டத்தில் கோடை முன்பே சுட்டெரிக்கும் வெயில்

2 hours ago 1

*சாலைகள் வெறிச்சோடியது

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் கோடை முன்பே வெயில் சுட்டெரித்தது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடியது. மார்கழி பனி கடந்த டிசம்பர் மாதம் முதல் பொழிந்து வந்தது. பகலிலும் புகை மூட்டம்போல் பனி கொட்டியது.

இந்நிலையில் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெயில் கோடை வெயில் போல் சுட்டெரித்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் வெயிலில் தாக்கம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வழக்கம் போல் ஒவ்வொரு ஆண்டு வெயிலின் காலம் மார்ச் மாதம் கடைசியில் தொடங்கும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வெயில் சுட்டெரிக்கும் ராயல் சீமா மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம் வெயிலுக்கு பெயர் போன்றது. இந்நிலையில் தற்போது சித்தூர் மாநகரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதேபோல் மாநகரத்தில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் குடைகளை வைத்து வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சித்தூர் காந்தி சிலை சர்க்கிள் அருகே எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று சித்தூர் காந்தி சர்க்கிள் பகுதியில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சித்தூர் மாநகரத்தில் காந்தி சாலை சர்ச் தெரு, ஹை ரோடு, பஜார் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். ஆனால் நேற்று வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று மட்டும் 35 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கம்போல் சிவராத்திரி வரை குளிர்காலம் இருக்கும். அதன் பிறகு வெயில் காலம் தொடங்கும். ஆனால் கடந்த மாதம் 28ம் தேதி சிவராத்திரி என்பதால் 20 நாட்களுக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சித்தூர் மாவட்டத்தில் கோடை முன்பே சுட்டெரிக்கும் வெயில் appeared first on Dinakaran.

Read Entire Article