சித்திரை முழுநிலவு மாநாட்டின் கோரிக்கைகள் என்ன? - ராமதாஸ் விளக்கம்

3 hours ago 2

சென்னை: "மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்ற போதிலும், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம் ஆகும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், "உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு புனிதக் கடமை இருக்கும். பாட்டாளி சொந்தங்களின் முதன்மையான புனிதக் கடமைகளில் ஒன்று, பாட்டாளிகளின் மண்ணான மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்பது தான். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்து நினைவூட்டவே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.

Read Entire Article