
சென்னை,
பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை சந்திப்பில் இருந்து மாமல்லபுரம் செல்வதற்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று அங்கிருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக கேளம்பாக்கம், கோவளம் சென்று கிழக்கு கடற்கரைச் சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.