சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

3 hours ago 1

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சித்திரை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. சென்ற ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் திரண்டதாகவும், நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று மாநகராட்சி கணித்துள்ளது.

இந்த சித்திரை திருவிழாவைக் காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவதால், அவர்களுக்கு தேவையான உணவு, நீர், மோர் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பின்னர் வரக்கூடிய ஒரு நாள் பணிநாளாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

The post சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article