சித்திரை அமாவாசை: ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

2 weeks ago 6

ஈரோடு,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மைசூர் செல்லும் பாதையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

அந்த வகையில் இன்று சித்திரை மாத அமாவாசை தினம் என்பதோடு, வார விடுமுறை தினம் என்பதால் பண்ணாரி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பண்ணாரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் உப்பு, மிளகு மற்றும் விவசாய விளைபொருட்களை தூவியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து நீண்ட வரிசைகளில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், சத்தியமங்கலம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article