
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் யூ'. 7 மைல்ஸ் பெர் செகண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் என்.ராஜசேகர் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் '3 பிஎச்கே' படத்தில் நடிக்கிறார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். சித்தார்த்தின் 40-வது படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.