![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37126896-1.webp)
சென்னை,
2014 ம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தை இயக்கி எஸ்.யு அருண் குமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இப்படம் பல திரைப்பட விழாக்களில் வெளியாகி மக்களின் மனதை வென்றது. 6 தமிழ்நாடு மாநில அரசு விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு சேதுபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபது மற்றும் ரம்யா நம்பீசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. மீண்டும் 2019ம் ஆண்டு விஜாய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்படத்தை இயக்கினார் ஆனால் இப்படம் மக்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக் 'சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37126962-1a.webp)
இந்நிலையில் இன்று இயக்குனர் அருண் குமாருக்கு திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் விக்ரம், விஜய் சேதுபதி, துஷரா விஜயன், விக்னேஷ் சிவன், சித்தார்த்,பால சரவணன், கலந்துக் கொண்டனர். திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.